டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமே இது மட்டும்தான் – ஷேன் வாட்சன் வெளிப்படை

Watson-1
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு இடையே சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல நினைக்கும் இந்திய அணிக்கு முதல் போட்டியிலேயே மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

Rohit Sharma IND vs SA

வரும் 23-ஆம் தேதி அன்று மெல்போர்ன் மைதானத்தில் தங்களது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அதற்கு பழி தீர்க்கும் விதமாக இம்முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்த தற்போது மும்முரமாக இந்திய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பலம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் இந்திய அணியில் உள்ள பலவீனங்கள் குறித்தும் சில முன்னாள் வீரர்கள் தங்களது வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் இந்திய அணியில் உள்ள பலவீனம் குறித்து சரியாக சுட்டிக்காட்டி சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

INDIA Arshdeep Singh Harshal Patel

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தற்போது மிகவும் வலுவாக உள்ளது. அதே வகையில் இந்திய அணியும் சுழற் பந்துவீச்சும் மிகச் சிறப்பாக உள்ளது. ஏனெனில் சாஹல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக தொடர்ந்து தங்களது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போதைய இந்திய அணியில் ஒரே ஒரு பலவீனமாக நான் பார்ப்பது யாதெனில் டெத் ஓவர்களில் இந்திய அணி செயல்படும் விதம் மட்டும் தான்.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே டெத் ஓவர்களில் இந்திய அணி நிறைய ரன்களை கொடுத்து எளிதாக போட்டிகளை இழந்து வருகிறது. இப்படி ஒரு வேளையில் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையை எதிர்கொள்ள உள்ளதால் இந்த தொடரில் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இந்திய அணியின் தற்போதைய டெத் ஓவர் பந்து வீச்சு மட்டும்தான் இந்திய அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் இளம் வயதில் விளையாடிய 5 வீரர்களின் பட்டியல் இதோ

ஐபிஎல் தொடரில் விளையாடும் போது அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை கவனித்து இருக்கிறேன். நிச்சயம் அவரால் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக பந்து வீச முடியும். அவருடன் சேர்ந்து மற்ற பவுலர்களும் கை கொடுத்தால் நிச்சயம் இந்திய அணியில் அந்த பலவீனம் நிவர்த்தி பெறும். இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை காண நான் ஆவலாக காத்திருக்கிறேன் என ஷேன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement