CSK : சி.எஸ்.கே தவிர வேறு எந்த அணியில் நான் இருந்து இருந்தாலும் என் நிலைமை இதுதான் – வாட்சன் பேட்டி

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் நாளை இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள

Watson-1
- Advertisement -

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் நாளை இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியோடு இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் நாளை வெற்றி பெறும் அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் துவக்க வீரரான வாட்சன் சென்னை அணி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சென்னை அணிக்காக துவக்க வீரராக ஆடி வருகிறேன். ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் ஆடி வருகிறேன். ஆனால் எனக்கு சிஎஸ்கே வில் கிடைத்த ஆதரவு போன்று வேறு எங்கும் கிடைக்கவில்லை. நான் சரியாக ஆடாத போதிலும் என் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து வாய்ப்பினை வழங்கி வருகிறார்கள்.

Watson-1

இதுவே வேறு அணியாக இருந்தால் என்னை நிச்சயம் அணியில் இருந்து நீக்கி இருப்பார்கள். எனவே சென்னை நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும், கேப்டன் தோனிக்கும் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களுக்கும் நன்றி என்று வாட்சன் கூறினார். இந்த தொடரில் வாட்சன் 16 போட்டிகளில் விளையாடி 318 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement