இந்தியாவை அடித்து நொறுக்கிய பேர்ஸ்டோ இவ்ளோ அதிரடியா விளையாட இதுதான் காரணம் – வாட்சன் ஓபன்டாக்

Watson-and-Bairstow
- Advertisement -

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியானது சமீபத்தில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்ததால் அண்மையில் ஜோ ரூட்டுக்கு பதிலாக புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பதவியேற்றார். அதேபோன்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சில்வர்உட்டும் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவிக்கு வந்தார். இவர்கள் இருவரது புதிய பதவி ஏற்றத்துக்கு பின்னர் தற்போது இங்கிலாந்து அணியானது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான வெற்றிகளை குவித்து வருகிறது.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

குறிப்பாக நான்காவது இன்னிங்சில் எவ்வளவு இலக்காக இருந்தாலும் அதனை வெகுவிரவாக எட்டிப்பிடித்து அசத்தலான வெற்றிகளை பெற்று வருகிறது. இப்படி இங்கிலாந்து அணி பெரும் வெற்றிகளில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான பேர்ஸ்டோவின் பங்கும் அதிக அளவில் உள்ளது.

நடைபெற்று முடிந்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதேபோன்று நடைபெற்ற முடிந்த இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபார சதம் அடித்த அவர் இங்கிலாந்து அணியை சுலபமாக வெற்றிக்கு அழைத்து சென்றார்.

Johny Bairstow

இந்நிலையில் இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட என்ன காரணம் என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எப்போதுமே பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஷார்ட்டர் ஃபார்மெட்டில் அதிரடியாக விளையாடும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிட்னி மைதானத்தில் அற்புதமான சதம் ஒன்றினை விளாசியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்கு எதிராகவும் அதிரடி சதத்தை விளாசியுள்ளார். இப்படி அவர் அதிரடியாக ரன்களை குவிக்க முக்கிய காரணம் யாதெனில் : அவர் பயமற்ற அதிரடியான பேட்டிங்கை உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : டெஸ்டில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? – முன்னோட்டம், வரலாற்று சாதனை புள்ளிவிவரங்கள் இதோ

அதோடு அணியின் பயிற்சியாளரும் கேப்டனும் அவருக்கு சுதந்திரத்தை கொடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவர் பதட்டம் இன்றி, எந்தவித அழுத்தமும் இன்றி அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement