இவர் பேட்டிங் பண்ண ஆரம்பித்தால் தானா ஸ்விட்ச் ஆன் செய்ஞ்சி பாப்பேன் – ஷேன் வாட்சன் பகிர்வு

Watson

ஷேன் வாட்சன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த உரையாடலின் போது ஐபிஎல் தொடரில் தனது அனுபவத்தை பற்றி வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் போட்டி தொடரில் இதுவரையில் வாட்சன் மூன்று உரிமையாளர்களுக்காக விளையாடினார், அது ராஜஸ்தான் ராயல்ஸ் (2008-2015), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2016-2017) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (2018-2020) ஆகும். ஐ.பி.எல்லில் வாட்சனின் சாதனை மிகவும் சுவாரஸ்யமானது. அவர் ஒரு வீரராக இதுவரை இரண்டு பட்டங்களை வென்றுள்ளார்.

தொடக்கத்தில் ஒரு முறை ராஜஸ்தானுடனும், சமீபத்தில் ஒரு முறை சென்னை அணியில் இடம்பெற்றும் கோப்பையை வென்றிருந்தார். 2018 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னைக்காக ஆடிய அவர் 117* அடித்தார்.அதுவே அவரது அதிகபட்ச தனி ஸ்கோர் ஆகும். மொத்தமாக 141 போட்டிகளில் ஆடி 3874 ரன்களை குவித்துள்ளார். அதில் 21 அரை சதங்களும் நான்கு சதங்களும் அடங்கும்.மேலும் 190 சிக்சர்களை பறக்க விட்டு இருக்கிறார்.

சென்ற ஆண்டோடு தனது அனைத்து வித கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட வாட்சன் தற்போது ஐபிஎல் பற்றி கேட்ட கேள்ளவிக்கு பதிலளித்துள்ளார். ராஜஸ்தான் அணி என்னை சிறப்பான வகையில் ஊக்குவித்தது மேலும் எனக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எட்டு ஆண்டுகள் ஆடியுள்ளேன். எனக்கும் அந்த அணிக்குமான உறவு என் வாழ்வில் ஒரு முக்கியமான உறவாகும். மூன்று ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தேன்.

Watson

அப்போது ராஜஸ்தான் அணி என்னை சிறப்பான வகையில் ஊக்குவித்ததோடு மேலும் எனக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்தது.காயத்திலிருந்து மீண்டு நான் சர்வதேச போட்டிகளில் விளையாட முக்கிய பங்காக அந்த அணி இருந்தது. ஆர்சிபியில் கோலி மற்றும் ஏபிடியுடன் ஆடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இருவருமே மிக சுவாரஸ்யமான மனிதர்கள்.அதிலும் ஏபிடி ஆட்டம் அமர்களமாக இருக்கும்.

- Advertisement -

ABD-1

அவர் ஆட ஆரம்பித்தால் ஆஃப் செய்த டிவியை கூட ஆன் செய்து பார்க்க வைத்து விடுவார் என்று கூறினார். இறுதியாக எம்.எஸ்.தோனியுடன் இருந்த தொடர்பு எனக்கு அது ஒரு சூப்பர் கூல் அனுபவம் என்று தனது சிஎஸ்கே அனுபவத்தைப் பற்றியும் ஷேன் வாட்சன் கலந்துரையாடலில் கூறினார்.