தோனி பற்றி சில சுவாரஸ்யம்…ஆட்டத்தில் அழுத்தம், கையாளும் விதம்..! மனம் திறந்து பகிர்ந்த ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்..!

- Advertisement -

தோனியின் புகழ் தற்போது நடந்து வரும் ஐபில் தொடரின் மூலம் நீண்டு கொண்டே போகிறது. கடந்த சில வருடங்களாக தோனி மீதான விமர்சங்கங்கள் வலுத்து வந்த நிலையில், தோனி தனது பார்மை மீண்டும் மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாமல், தற்போது சென்னை அணியை தலைமை ஏற்றுள்ள தோனி அந்த அணியை டாப் 3 இடங்களில் நீண்ட நாட்களாக நிலைத்து வைத்துள்ளார்.

bravo-dhoni

தோனியின் இந்த கம் பேக் ரசிகர்களை மகழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், தோனியுடன் ஆடும் சக வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட சென்னை அணியில் விளையாடி வரும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தோனியின் ஆட்டத்தை கண்டால் பந்துவீச்சாளர்கள் கண்களில் பயம் தெரியும் என்று தோனியை பற்றி புகழ்ந்து பாடினார்.

- Advertisement -

இந்நிலையில் தோனியின் ஆட்டத்தைப்பற்றி சென்னை அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டு வீரர் ஷேன் வாட்சன் கூறுகையில்”நான் ஆஸ்திரேலியா அணியில் விளையாடிய போது தோனியின் ஆட்டத்தை கண்டுள்ளேன். நான் அவரை எதிர்த்து ஆடிய போது எந்த அளவிற்கு அவர் மிகவும் நிதானமாக இருந்தாரோ, நான் அவருடன் விளையாடும் போதும் அவர் அதே நிதானத்தில் தான் உள்ளார் என்பதை நான் உணர்ந்தேன். ஒரு வலிமையான கேப்டனுக்கு கீழ் ஆடுவதை நான் பெருமையாக கருதிகிறேன் ” என்று தெரிவித்திருந்தார்.

watson

இந்த தொடரில் சென்னை அணியில் விளையாடிவரும் ஷேன் வாட்சன் 10 போட்டிகளில் 328 ரன்களை குவித்துள்ளார் மேலும் இதுவரை இந்த தொடரில் 150 பந்துகளை வீசியுள்ள இவர், 227 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு சர்வேதேச வீரர் தோனியை பற்றி இவ்வளவு பெருமையாக குறிப்பிடும் போதும், தோனியை பிடிக்காது என்று கூறுபவர்களை கண்டால் சற்று ஆச்சர்யமாக தான் இருக்கிறது.

Advertisement