சி.எஸ்.கே அணிக்கு இதயத்துடிப்பே நீங்கள்தான். நாடு திரும்பிய ரெய்னாவிற்கு உருக்கமான செய்தி அனுப்பிய – வாட்சன்

Watson
- Advertisement -

பல்வேறு தடைகளைக் கடந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து வீரர்கள் அனைவரும் 21ம் தேதியே ஐக்கிய அரபு அமீரகம் சென்று அடைந்து விட்டனர். மேலும் அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இப்போது பயிற்சிகளையும் அவர்கள் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் சிக்கிய சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் வீரர்களை செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை தனிமைப்படுத்தி உள்ளது. இந்த செய்தி சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தியாக மாறியுள்ளது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி தரும் விடயமாக சுரேஷ் ரெய்னா சொந்த பிரச்சினை காரணமாக நாடு திரும்பியுள்ளார் என்று சிஎஸ்கே அணியின் செயல் அதிகாரி காசி விசுவநாதன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்.

இது போன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துணை நிற்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ரெய்னாவின் இந்த பிரிவு குறித்து சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் தனது வருத்தத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

நான் உங்களை நினைத்து கொண்டிருக்கிறேன் சுரேஷ் ரெய்னா. உங்கள் நினைப்பும், உங்களின் குடும்பத்தைப் பற்றி என் எண்ணங்களும் எப்போதும் இருக்கும். சென்னை அணி நிச்சயம் உங்களை மிஸ் செய்யும். நீங்கள் எப்போதும் அணியின் இதயத் துடிப்பாக இருந்து உள்ளீர்கள். அதனால் உங்களை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். நீங்கள் நலமுடனும் பாதுகாப்புடனும் இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement