நல்லா ரெஸ்ட் எடுத்திருக்காரு. ஆசியக்கோப்பையில அசத்தப்போறாரு. கவலையேபடாதீங்க – வாட்சன் நம்பிக்கை

Watson 1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சமீப காலமாகவே ரன் குவிப்பதில் பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வருவது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதோடு நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Virat Kohli IND vs PAK

- Advertisement -

இதனால் அவருக்கு ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் தற்போது ஒரு மாத ஓய்விற்கு பிறகு மீண்டும் நாளை மறுதினம் துவங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் விளையாட இருக்கிறார். இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கம்பேக் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் விராட் கோலிக்கு நல்ல ஓய்வு கொடுத்தல் கிடைத்துள்ளதால் அவர் மனதளவிலும், உடலளவிலும் தற்போது புத்துணர்ச்சியுடன் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Kohli

இது குறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளின் போது விராட் கோலியின் ஆற்றல் சற்றே குறைந்தது. அதுமட்டும் இன்றி அவர் ரன் குவிக்க தடுமாறினார். அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அந்த தடுமாற்றம் தொடர்ந்தது. ஆனால் தற்போது ஒரு மாதம் வரை அவர் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளதால் தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று இருப்பார் என்று நம்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் சேர்ப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோலி போன்ற ஒரு தரமான வீரர் ஃபார்மிற்கு திரும்புவது எளிதான ஒன்று. அந்த வகையில் என்னை பொறுத்தவரை ஆசியக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்றும் அதில் நிச்சயம் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என்றும் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement