ரத்தம் வடிய வடிய நான் சி.எஸ்.கே அணிக்காக விளையாட இதுவே காரணம் – ஷேன் வாட்சனின் பிறந்தநாள் பதிவு

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அசத்தினார்.

Watson

- Advertisement -

2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 117 ரன்கள் விளாசி கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அதேபோல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இந்த போட்டியில் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்து, கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. குறிப்பாக இந்த தொடர் முழுவதும் ஷேன் வாட்சன் சரியாக ஆடவில்லை. ஆனால் தோனி அவர் மீது நம்பிக்கை வைத்து ஆட வைத்தார். இறுதிப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என தனது காலில் அடிபட்டதை கூட பொருட்படுத்தாமல் விளையாடினார்.

Watson 1

அவரது இடது முட்டியில் பிளவு ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ரத்தம் சொட்டச் சொட்ட அந்த இறுதிப் போட்டியில் ஆடினார். இதுகுறித்து அவர் தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில்..
எப்படியாவது அந்த போட்டியை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கடுமையாக போராடி விளையாடினேன்.

- Advertisement -

என் முட்டியில் வந்த ரத்தம் என்னை நிறுத்திவிடக் கூடாது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அவ்வாறு எனக்குள்ளே ஒரு போராட்டத்தை நடத்தி விளையாடினேன். ஆனால், தோல்வி அடைந்துவிட்டோம். இது சற்று எனக்கு வருத்தமாக இருக்கிறது இருந்தாலும் என்னை முழுமையாக அர்ப்பணித்து போராடினேன் என்று கூறியுள்ளார் ஷேன் வாட்சன்.

Watson-1

ஷேன் வாட்சன் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில் அவர் குறித்த இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு நீங்களும் வாழ்த்து தெரிவிக்கலாம் நண்பர்களே.

Advertisement