சி.எஸ்.கே அணியிலிருந்து வாட்சன் ஓய்வுபெற்ற போது சக வீரர்களிடம் கூறிய விடயம் – விவரம் இதோ

Watson

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஷேன் வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர். 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வாட்சன் அதன் பிறகு உலகெங்கும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். குறிப்பாக சென்னை அணிக்கு 2018 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

அவர் சென்னை அணிக்காக விளையாடிய முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்கு பெற்றுக் கொடுத்து அசத்தினார். அதன் பிறகு கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய சென்னை அணிக்கு உறுதுணையாக இருந்தவர். இறுதிப்போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தை கூட பொருட்படுத்தாமல் இறுதிவரை ரத்தம் சொட்ட சொட்ட விளையாடி சென்னை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த வாட்சனால் தனது சிறப்பான ஆட்டத்தை தர முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதை அடுத்து பல மூத்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரியவந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தற்போது ஷேன் வாட்சன் ஐபிஎல் உட்பட எந்த கிரிக்கெட்டிலும் தான் விளையாட போவதில்லை என முழு கிரிக்கெட்டுக்கும் ஓய்வை அறிவித்துள்ளார்.

கடைசியாக நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் வெற்றி பெற்று ஓய்வு அறைக்கு திரும்பியதும் வாட்சன் உணர்ச்சிகரமாக காணப்பட்டுள்ளார். மேலும் அவர் ஓய்வுக்கான காரணத்தையும் சக வீரர்களின் முன்னிலையில் வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி அவர் பேசியபோது : சென்னை அணிக்காக முடிந்த அளவு என்னால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை கொடுத்துள்ளேன்.

- Advertisement -

மேலும் சென்னை அணிக்காக நான் விளையாடிய நாட்களை மறக்க முடியாது எனவும் தற்போது எனக்கு ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தோன்றுகிறது. அதனால் நான் முழு கிரிக்கெட்க்கும் ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன் என சக வீரர்களிடம் உணர்ச்சிகரமான சில கருத்துக்களை கூறியுள்ளார்.

Watson

39 வயதான ஷேன் வாட்சன் 2002 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கிரிக்கெட் உடனே பயணித்துள்ளார். இனி கிரிக்கெட் அவரது வாழ்க்கையில் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் அளிக்கும் விடயமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..