6 அணிகளில் இம்முறை ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார் – ஷேன் வாட்சனின் கணிப்பு இதோ

Watson-1
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15 வது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. விரைவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை தயாராகும் வகையில் 20 ஓவர் தொடரை நடைபெறும் இந்த தொடரில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கிறது. மேலும் கடைசியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வலுவான அணியாக இருப்பதால் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsPAK

- Advertisement -

இந்த தொடரில் 6 அணிகள் மோதினாலும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சனை காரணமாக இதுபோன்ற ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதி வருகிறது. அந்த வகையில் சுமார் ஒரு வருடம் கழித்து இவ்விரு அணிகளும் மோதும் நிலையில் கடைசியாக இதே மைதானத்தில் மோதிய போது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றி எழுதியது.

வெல்லப்போவது யார்:
எனவே கடந்த முறை விராட் கோலி தலைமையில் சரித்திர தோல்வியை சந்தித்து தலைகுனிந்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோஹித் சர்மா தலைமையில் பதிலடி கொடுக்க களமிறங்குகிறது. அந்த தோல்விக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா வலுவான அணியாக திகழ்வதால் இம்முறை பாகிஸ்தானை ஒருகை பார்க்க தயாராகியுள்ளது.

shaheen afridi 1

இருப்பினும் கடந்த முறை தோல்வியடைய முக்கிய பங்காற்றிய சாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் விலகியதை பற்றி கவலைப்படாத பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் விலகியதால் இந்தியா தப்பித்து விட்டதாக வம்பிழுத்து வருகிறார்கள். எனவே இந்த வாய் சவடால்களுக்கு இந்தியா களத்தில் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement -

வாட்சனின் கணிப்பு:
இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி மிகவும் முக்கியமானது என தெரிவிக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவரே ஆசிய கோப்பையை வெல்வார்கள் என்று கணித்துள்ளார். அந்த வெற்றியாளர் இந்தியாவாக இருக்கும் என்று கணித்துள்ள அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “வெற்றியாளரை பற்றிய என்னுடைய கணிப்பு இந்தியாவாகும். அந்த முதல் போட்டி மிகவும் ஸ்பெஷலானதாக அமையப்போகிறது. ஏனெனில் இந்தியாவை தங்களால் தோற்கடிக்க முடியும் என்ற முழு நம்பிக்கை பாகிஸ்தானிடம் உள்ளது”

Watson 1

“அதனால் அந்த முதல் போட்டியில் வெல்பவர்கள் எஞ்சிய தொடரிலும் அபாரமாக செயல்பட்டு இந்த ஆசிய கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது இந்தியாவாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அவர்களது பேட்டிங் வரிசையில் நெருப்பைப் போன்ற அதிரடி காட்டுபவர்கள் உள்ளனர். எனவே அவர்களை வீழ்த்துவது எதிரணிக்கு கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

அதேபோல் கடுமையான விமர்சனத்தில் தவிக்கும் விராட் கோலி ஒரு மாத ஓய்வுக்குப் பின் புத்துணர்ச்சியுடன் வருவது இந்த தொடரில் இழந்த பார்மை மீட்டெடுக்க உதவும் என்று கூறியுள்ள ஷேன் வாட்சன் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “சமீபத்திய ஐபிஎல் தொடரில் அவருடைய எனர்ஜி சற்று குறைந்தது போல் உங்களுக்கு தெரிந்தது. சோம்பலாக இருந்தாலும் அவர் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார் என்று நீங்கள் கூறலாம். ஆனால் சமீப காலங்களில் அவருடைய ஒளிமயம் குறைந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும்”

Shaheen-afridi

“இருப்பினும் இந்த மாதம் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த அவர் நல்ல புத்துணர்ச்சியுடன் ஒளி மயத்துடன் விரைவில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது என்பதை மனதில் கொண்டு இந்த ஆசிய கோப்பையில் விளையாட வருகிறார்.

இதையும் படிங்க : வீடியோ : ஆசியக்கோப்பை பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட விராட் கோலி – வைரலாகும் பயிற்சி வீடியோ

எனவே அந்த ஓய்வு குறிப்பாக விராட் கோலி போன்ற இந்திய கிரிக்கெட்டில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுபவருக்கு நிச்சயம் தனது எனர்ஜியை மீட்டெடுக்க உதவும். உடல் அளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி அடைந்துள்ள அவரால் ஒருசில பந்துகளிலேயே அந்த பழைய பார்மை கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறினார்.

Advertisement