இறுதிபோட்டியில் ஜெயிக்கப்போவது அவங்கதான்.. ஆட்டநாயகன் அவர் தான் – ஷேன் வாட்சன் கணிப்பு

Shane Watson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. அந்தவகையில் பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

2025 ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? : ஷேன் வாட்சன்

இந்நிலையில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிபயர் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 வெற்றி மற்றும் 4 தோல்விகள் என 19 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று முல்லன்பூர் நகரில் நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் ஆட்டத்தில் பெங்களூரு அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றபோது யார்? என்பது குறித்த தனது கணிப்பினை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் 2025 ஐபிஎல் தொடரின் கோப்பை கைப்பற்றும் என்று நினைக்கிறேன். மேலும் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி இருப்பார் என்று தனது உள்ளுணர்வு கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயரை டெஸ்ட் அணியில் சேர்க்காதது ஏன்? பொறுப்பற்ற பதிலை தெரிவித்த – கவுதம் கம்பீர்

ஜோஷ் ஹேசல்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு கோப்பையின் அருகில் வரை சென்ற பெங்களூரு அணி அந்த கோப்பையை தவறவிட்டது. இந்நிலையில் நிச்சயம் இந்த ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என ஷேன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement