சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கடந்த மூன்று வருடங்களாக விளையாடி வருகிறார். பல இக்கட்டான சூழ்நிலையில் அணியை விட்டு பிரிந்து செல்லாமல் தொடர்ந்து அணிக்காக விளையாடியவர். கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கூட அவரது காலில் அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட கடைசி வரை நின்று வெற்றிக்காக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 175 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதுவும் குறிப்பாக அந்த போட்டியில் மொத்தம் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்ததார். அவரது இந்த மெதுவான ஆட்டத்தின் காரணமாக அவர் மீது விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. கடந்த மூன்று போட்டியிலும் இப்படித்தான் குறைந்த ரன்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த போட்டிக்கு முன்னர் அவர் இருந்த இக்கட்டான சூழ்நிலை குறித்த பின்னணி வெளியாகியுள்ளது.
அதாவது இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் ஷேன் வாட்ஷனுக்கு ஒரு துரதிஷ்டவசமான செய்து வந்து சேர்ந்திருக்கிறது இருந்தாலும் அணி தான் முக்கியம் என்று அணிக்காக விளையாடி கொடுத்திருக்கிறார். ஷேன் வாட்சனின் தாயாரின் அம்மா அதாவது அவரது பாட்டி வயோதிகம் காரணமாக காலமாகிவிட்டார்.
சிறு வயதில் இவரை வளர்த்து அவர்தான். இந்த போட்டிக்கு முன்தினம் அவர் காலமாகி உள்ளார் என்ற செய்தி வந்தவுடன் வாட்சன் அணியை விட்டு வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏற்கனவே பல முக்கிய வீரர்கள் சி.எஸ்.கே அணிக்காக விளையாட முடியாத சூழ்நிலையில் நானும் சென்றால் நல்லா இருக்காது. நான் சென்னை அணிக்காக தொடர்நது விளையாடுவேன் என்று கூறிவிட்டு அந்த சோகத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இருக்கிறார் ஷேன் வாட்சன்.