கேப்டன்ன்னு சொன்னா அது இவங்க ரெண்டு பேர்தான் ஷேன் வாட்சன் தேர்வு செய்த அந்த இரண்டு கேப்டன்கள் யார் தெரியுமா ?

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். தான் விளையாடிய காலகட்டத்தில் பல்வேறு கேப்டன்கள் கீழ் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு பாண்டிங் தலைமையில் அறிமுகமான பின்னர் அதன் பிறகு மைக்கேல் கிளார்க், ஸ்டீவன் ஸ்மித் என வித்தியாசமான கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார்.

watson

- Advertisement -

ஏன் அவரே சில ஆண்டுகள் கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்தியுள்ளார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷேன் வாட்சன் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் முதல் சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக ஷேன் வாட்சன் திகழ்ந்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் டிராவிடின் தலைமையின் கீழும் விளையாடி உள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியில் விளையாடி அவர் அதன்பிறகு 2016, 17 ஆகிய ஆண்டுகளில் ஆர்சி அணிக்காகவும் அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

Watson-1

இந்நிலையில் தற்போது இதுவரை தான் விளையாடிய கேப்டன்களில் யார் சிறந்த கேப்டன் என்று தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி சர்வதேச அளவில் ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி, பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் என பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ள வாட்சன் சிறந்த இரு கேப்டன்கள் குறித்த தனது கருத்தில் கூறியதாவது :

- Advertisement -

என்னை பொறுத்தவரை ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரை தான் மிகச் சிறந்த இரு கேப்டன்கள் என்று தெரிவித்துள்ளார். ரிக்கி பாண்டிங் தன்னிடம் இருந்த திறமைகளை வெளிக் கொண்டு வந்ததில் சிறப்பானவர் என்பதால் அவர்கள் தலைமையில் ஆடியதை பெருமையாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த வகையில் பாண்டிங் தலைமையின் கீழ் விளையாடியதில் தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Ricky-Ponting

Warne

அதற்கடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன் தலைமையில் நான்கு ஆண்டுகள் விளையாடியது மிகவும் சிறப்பான தருணங்கள் என்று குறிப்பிட்டவர் வார்ன் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல உத்திகளை வகுப்பவர் அவர் களத்தில் வீரர்களை சிறப்பாக கையாளக்கூடியவர் எனவே என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் சிறந்த கேப்டன் என்று வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement