ரெய்னாவிற்கு பதிலாக அவரது இடத்தில் விளையாட இவரே சரியானவர் – ஷேன் வாட்சன் வெளிப்படை

Watson
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Raina

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து அதிரடியாக வெளியேறிய சென்னை அணியின் முன்னணி வீரரான ரெய்னாவின் இடத்தை நிரப்புவது யார் ? என்ற கேள்வி தான் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. சிஎஸ்கே அணியின் முன்னணி நட்சத்திர வீரரும், மேட்ச் வின்னர்களில் ஒருவருமான ரெய்னா சென்னை அணிக்காக இதுவரை 5368 ரன்களை குவித்துள்ளார். மேலும் 137.14 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த ரன்களை குவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விராட் கோலிக்கு அடுத்து ஐபிஎல் இல் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தில் ரெய்னா உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு அனுபவம் வாய்ந்த வீரரின் இடத்தை நிரப்புவது என்பது ஒரு கடினமான விடயம் என்றாலும் சிஎஸ்கே அந்த முக்கிய வேலையை செய்து தான் ஆகவேண்டும் பலரும் அதுபற்றி பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் சுரேஷ் ரெய்னாவின் இடத்தை நிரப்பும் வீரர் வைத்து தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Vijay

சி.எஸ்.கே அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது என்பது மிகக் கடினமான ஒரு விடயம்தான் ஏனெனில் ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மென் நிச்சயம் ஒவ்வொரு அணிக்கும் தேவை.

அந்த வகையில் தற்போது ரெய்னாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக சென்னை அணியில் முரளி விஜய் களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் முரளி விஜய் சுழற்பந்து வீச்சுக்கும் சரி, வேகப்பந்து வீச்சிற்கும் சரி சிறப்பாக ஆடக்கூடியவர். அது மட்டுமின்றி அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால் நான் அவரையே ரெய்னாவின் இடத்திற்கு நான் பரிந்துரைக்கிறேன் என்று வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement