இதை சரியா செய்யும் தோனி ஏன் ரிட்டையராகனும்.. சிஎஸ்கேவை முடிஞ்சதா எழுதாதீங்க.. வாட்சன் பேட்டி

Shane Watson
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் 3 தோல்விகளைப் பதிவு செய்த சென்னை ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு தாமதமாக பேட்டிங் செய்ய வரும் தோனி மெதுவாக விளையாடுவதே காரணம் என்று எதிரணி ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். எனவே 43 வயதாகும் தோனி இனிமேலும் விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் 4 போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ள சென்னை இங்கிருந்து மேலே வந்து கோப்பையை வெல்லாது என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது. இந்நிலையில் தோனி மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து பேட்டிங்கில் நல்ல ரன்கள் குவிப்பதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். எனவே ஓய்வு பெறும் அளவுக்கு தோனி மோசமாக விளையாடவில்லை என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

தோனி ஏன் ஓய்வாகனும்:

மேலும் தோனி கடைசிக்கட்ட ஓவர்களில் வந்து நல்ல ஃபினிஷிங் கொடுக்க பேட்டிங் துறையில் மற்ற பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்கள் அடிப்பது அவசியம் என்றும் வாட்சன் கூறியுள்ளார். அத்துடன் தோனி, பிளெமிங் ஆகிய 2 சிறந்த தலைவர்கள் இருக்கும் போது சிஎஸ்கே அணியை முடிந்ததாக எழுத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி வாட்சன் பேசியது பின்வருமாறு.

“எப்போதும் நீங்கள் சிஎஸ்கே அணியை முடிந்ததாக எழுத முடியாது. அவர்களுக்கு எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும். அது ஸ்டீபன் பிளம்மிங், எம்எஸ் தோனி அல்லது மொத்த சிஎஸ்கே அணியாக இருக்கட்டும் அவர்களுக்கு எப்படி விஷயங்களைத் திருப்ப வேண்டும் என்பது தெரியும். அவர்களின் மறுமலர்ச்சி டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படும் போது ஏற்படும்”

- Advertisement -

வாட்சன் ஆதரவு:

“ஏனெனில் டாப் ஆர்டர் சிறப்பாக விளையாடினால் அது மிடில், லோயர் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். டேவோன் கான்வே – ரச்சின் ரவீந்திரா ஆகியோர் துவக்க வீரர்களாகவும் ருதுராஜ் 3வது இடத்திலும் விளையாடுவது தேவையான மாற்றமாகும். அது சென்னை அணிக்கு நல்ல வளைவுத் தன்மையை கொடுக்கும்”

இதையும் படிங்க: 4, 0, 4, 6 ,4 ,6.. லக்னோ 238 ரன்ஸ்.. சேவாக்கை முந்தி பூரான் அதிரடி சாதனை.. கொல்கத்தாவை பந்தாடிய மார்க்ரம், மார்ஷ்

“இப்போதும் சிறப்பாக கீப்பிங் செய்யும் எம்எஸ் தோனி டாப் ஆர்டர் தங்களது வேலையை செய்யும் போது நன்றாக ஃபினிஷிங் செய்வார். கடைசிக்கட்ட ஓவர்களில் போட்டியை முடிப்பதே தற்போது சிஎஸ்கே அணியில் அவருடைய வேலையாக இருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்து வருகிறார். எனவே அணியில் உள்ள மற்றவர்கள் அவர் ஃபினிஷிங் செய்வதற்கான ஆட்டத்தை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement