CSK vs MI : நன்றாக துவங்கி எதிர்பாராமல் அவுட் ஆகி சென்னை அணியை தவிக்கவிட்ட வாட்சன் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமை

Watson-1
- Advertisement -

நேற்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 156 ரன்களை இலக்காக விரட்ட துவங்கிய சென்னை அணியின் துவக்க வீரரான வாட்சன் 2 பவுண்டரிகளுடன் சிறப்பாக ஆரம்பித்தாலும் முதல் ஓவரின் 5 ஆவது பந்தில் மலிங்கா பந்துவீச்சில் லெக்சைடில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த விக்கெட் மட்டும் விழாமல் இருந்திருந்தால் வலுவில்லாமல் இருந்த சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். இறுதி நேரத்தில் பாண்டியா அதிரடியாக 23 ரன்களை குவித்தார்.

பின்பு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement