நான் அதிரடியாக விளையாடியதற்கு இவர்கள் தான் காரணம்..! – வாட்சன் உருக்கும்..! – யார் தெரியுமா..?

watson
- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை (மே 27) அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் பட்டத்தை வென்றது சென்னை அணி. சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் வாட்சனின் சதத்தால் வெற்றி கோப்பையை கையில் ஏந்தியது சென்னை அணி. ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் போட்டி கடந்த ஞாயிற்று கிழமை இனிதே நிறைவு பெற்றது. இந்த தொடரில் சென்னைஅணியில் விளையாடி வந்த வாட்சன்.
Watson2

இந்த தொடர் முழுவதும் மஞ்சள் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வந்தார். கடந்து ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி வந்த வாட்சன் சிறப்பாக ஜொலிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 555 ரன்களை குவித்துள்ளார் அதில் 2 சதமும் அடங்கும். மேலும் இந்த தொடரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுளளார்.

- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை சென்னையின் வெற்றிக்கு பிறகு பேசிய வாட்சன் “இன்று போட்டி எனக்கு சாதகமாக இருந்ததால் இந்த மிக பெரிய நான் சிரிப்பாக விளையாட உறுதுணையாக அமைந்தது. இது எனக்கு சிறப்பான விஷயம் தான்.புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார்,முதல் 6 ஓவர்களை நாங்கள் பொறுத்திருந்து பார்த்தோம், பந்து சற்று நிதானமடைய எங்களுக்கு பின்னர் சுலபமாகி விட்டது.
watson

நல்ல விஷயம் என்னவென்றால் நான் இன்னும் சில காலத்திற்கு விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் நான் விரைவில் நலமடைவேன். எனக்கு தோனி,பிளெம்மிங், டாமி ஆகியோரின் ஆதரவு சிறப்பாக அமைந்தது” என்று கூறி விடை பெற்றார்.

Advertisement