தோனி ஓய்வு பெற்றாலும் இந்திய அணிக்கு இவர் இருக்கிறார் . அது போதும் – வாட்சன் ஆறுதல்

Watson

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்கேற்றவர் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய இவர் 2018 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

மேலும் கடந்த ஐபிஎல் இறுதிபோட்டியின் போது காலில் ரத்தத்துடன் அவர் சென்னை அணிக்காக விளையாடியதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவது குறித்து முக்கிய கருத்துக்களை தற்போது வாட்சன் கூறியுள்ளார். அதன்படி வாட்சன் கூறுகையில் : தோனியிடம் நல்ல திறமை இருக்கிறது அவர் இப்பொழுது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவர் களத்தில் செயல்படும் திறன், ரன் ஓடும் போது அவருடைய வேகம் மற்றும் அனுபவம் எல்லாம் நமக்கு தெரியும். அவர் எது செஞ்சாலும் சரியாகவே செய்வார். மேலும் அதற்கு தேவையான அனுபவம் அவரிடம் உள்ளது. அதனால் அவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது ஓய்வு முடிவை எடுக்கட்டும். அவரின் இடத்தை பூர்த்தி செய்யும் திறமை தற்போது இந்திய அணியின் விராட் கோலிக்கு மட்டுமே உள்ளது.

MS-and-VK

தோனியை போன்று எல்லா விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்த கோலி தற்போது தயாராகி இருக்கிறார். மேலும் அவருக்கு இந்திய அணி வீரர்களின் ஒத்துழைப்பும் இருக்கிறது. தற்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பானதாக உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பலமாக உள்ளது. என்று வாட்சன் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -