தொடர்ந்து கடந்த 8 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருபவர் சஞ்சு சம்சன். தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தாலும் இவருக்கு தற்போது வரை இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக மகேந்திர சிங் தோனி இருந்தவரை விக்கெட் கீப்பர் என்பதால் இவர் மேல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிதான ஈடுபாடும் இல்லை.
தற்போது மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். இதன்காரணமாக அவருக்கான இடத்தை நிரப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துவிட்டது. ரிஷப் பண்ட், இஷான் கிசான், பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் போன்ற பல வீரர்கள் அந்த இடத்திற்கு போட்டி போட்டு வருகிறார்கள். அதில் பண்ட் மட்டும் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இதில் சஞ்சு சம்சன் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடும் வகையில் தன்னை கடந்த 8 ஆண்டுகளாக தயார் செய்து வருகிறார். இதனை அனைத்து முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் உறுதி செய்துள்ளனர்.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தி லும் 42 பந்துகளில் 85 ரன்கள் குவித்து பிரம்மாண்டமாக ஆடினார்.இதனை பார்த்த முன்னாள் ராஜஸ்தான் அணி வீரர் ஷேன் வார்னே பாராட்டிப் பேசியுள்ளார் அவர் கூறியதாவது….
சஞ்சு சாம்சன் ஆட்டம் என்னை பிரமிக்க வைக்கிறது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார். இவரை ஏன் இந்திய அணியில் சேர்க்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக இவர் மூன்று வடிவமான போட்டிகளிலும் விளையாட தகுதியான அளவில் நேர்த்தியாக ஆடக்கூடியவர். இவர் கண்டிப்பாக வரும் தொடர்களில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஷேன் வார்னே.