குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கலைனா இந்த தண்டனை குடுங்க – ஷேன் வார்ன் கோரிக்கை

Warne
- Advertisement -

சமீப காலமாக விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த அதிக நேரம் பல்வேறு விஷயங்களை சார்ந்திருக்கிறது. பேட்டிங் அணி மிக நன்றாக ஆடிக்கொண்டிருந்தால், ஒவ்வொருவரையும் யோசித்து ஒவ்வொரு ஓவரும் வீசுவார்கள். அதேநேரத்தில் எதிர் அணியின் கேப்டன் பல்வேறு உத்திகளை யோசிக்கவும் நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி பந்துவீச்சாளர்களை மாற்றுவது பீல்டிங் திட்டங்களை மாற்றுவது என பல்வேறு வழிகளில் நேர விடயம் ஏற்படுகிறது.

indvsaus

- Advertisement -

அதனை தாண்டி பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பதால், அவர்களில் யாரை சரியாக தேர்வு செய்து பந்துவீச வைப்பது என்றும், எதிர் அணி கேப்டன் யோசித்துக் கொண்டிருப்பார். அதைத்தாண்டி பேட்டிங் பிடித்துக் கொண்டிருக்கும் அணியின் போக்கை கட்டுப்படுத்துவதற்காக ஒரு சில நேரங்களில் வேண்டுமென்றே எதிர் அணி கேப்டன்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வது வழக்கம். இது போன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு விடயங்கள் காரணமாக போட்டி தாமதமாகி நடைபெற்று வருவதை நாம் சமீபமாக அதிகம் பார்த்து வருகிறோம்.

ஐபிஎல் தொடரிலும் பல்வேறு அணிகள் குறிப்பிடப்பட்ட நேரத்தை விட பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதையும் நாம் பார்த்திருப்போம். இதன் காரணமாக எதிர் அணி கேப்டன் மற்றும் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதிக்கும் விதிமுறையை வைத்திருக்கிறது. அப்படி இருந்தும் வீரர்கள் இதனை கண்டுகொள்ளாமல் அபாரதம் தானே என்று அவ்வப்போது அதிக நேரம் எடுத்துக்கொண்டே பந்துகளை வீசுகிறார்கள்.

IND

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அனைவருக்கும் அவர்களது ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற விதிகள், வீரர்களை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்திருக்கிறார் ஷேன் வார்னே. இதுகுறித்து பிரத்யாக பேட்டி ஒன்றினையும் அவர் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

saini

இந்த விஷயத்தில் ஐசிசி மிகவும் கறாராக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு ஓவருக்கும் 25 ரன்கள் அபராதமாக விதிக்க வேண்டும். இந்திய அணி முதல் ஆட்டம் முடிய வேண்டிய நேரத்தில், வெறும் 46 ஓவர்கள்தான் வீசி இருந்தது என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் ஷேன் வார்னே. இப்படி ஒரு ஓவருக்கு 25 ரன்கள் அபராதமாக விதித்தால் எந்த அணியும் கால தாமதம் செய்யமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement