பணத்திற்காக நீங்க இப்படி பண்றது ரொம்ப தப்பு. ஆஸி வீரர்களை கடுமையாக விமர்சித்த – ஷேன் வார்னே

Warne
- Advertisement -

கொரானா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை வருகிற செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது பிசிசிஐ. அந்த சமயத்தில் மற்ற நாட்டு அணிகளுக்கு சர்வதேச போட்டிகள் இருப்பதால், மீண்டும் தொடங்கும் இரண்டாவது பாதி ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஏற்கனவே அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் அறிவித்துவிட்டன.

IPL

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல்லில் வரும் பணத்திற்காக தங்களது தேச நாட்டு அணியில் இருந்து விலகியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக விமர்ச்சித்து உள்ளார், அந்நாட்டின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே. அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீசிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணியானது 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதைத் தொடர்ந்து பங்ளாதேஷிற்கும் சென்று டி20 தொடரில் விளையாட இருக்கும் அந்த அணியில் இருந்து முன்னனி வீரர்களான டேவிட் வார்னர், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

தங்களது சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அவர்கள் அறிவித்திருந்தாலும், மீண்டும் தொடங்க இருக்கும் ஐபிஎல்லில் விளையாடுவதற்காகத்தான் அவர்கள் அணியில் இருந்து விலகியுள்ளனர் என்று வெளிப்படையாகயே தெரிகிறது. அவர்களின் இந்த செயல்பாட்டை கடுமையாக விமர்ச்சித்து பேசி இருக்கும் ஷேன் வோர்ன் கூறியதாவது, உங்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை இருந்தால் ஐபிஎல்லில் விளையாடிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை.

ஆனால் அதற்குப் பிறகு உங்களுக்கு ஆஸ்திரேலிய அணியில் உடனேயே இடம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு இணையான சிறந்த வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பி வரும்போது நிச்சயமாக சில போட்டிகளில் பெஞ்ச்சில் தான் உட்கார வைக்கப்படுவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது சொந்த நாட்டிற்காக விளையாடுவதை தவிர்க்கும் இதுபோன்ற வீரர்களை மீண்டும் அணிக்குள் சேர்ப்பது அவ்வளவு மதிப்பிற்குரிய விடயமாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

Maxwell

கொரானா பயோபுளில் இருந்தது அதிகமான மனசோர்வை அளித்திருக்கிறது. எனவே அதிலிருந்து மீண்டு வருவதற்காகவே எதிர்வரும் தொடர்களில் இருந்து விலகுவதாக இந்த மூவரும் அறிவித்திருந்தனர். அவர்களுடைய முடிவிற்கு எந்தவித எதிர்ப்பையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவிக்காத நிலையில், ஷேன் வார்னே இப்படி கூறியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement