இதுதான் உலகின் சிறந்த ஒருநாள் அணி. ஆனால் தோனிக்கே இடமில்லையாம் – வார்னே வெளியிட்ட 11 பேர் கொண்ட அணி

warne
- Advertisement -

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. பல ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி முன்னணி வீரராக திகழ்ந்தவர். மேலும் தான காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது மாயாஜால பந்துவீச்சின் மூலம் அவர்களுக்கு கடும் போட்டியை அளித்தவர் ஆவார்.

Warne

- Advertisement -

இந்நிலையில் தற்போது உலகின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டிக்கான அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். ஓய்விற்கு பிறகு பல்வேறு அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் மிகச்சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்யக் கோரி அவரிடம் கேட்டிருந்தார்.

அந்த கேள்விக்கு பதிலாக தற்போது அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இதில் இரண்டு இந்திய வீரர்களுக்கு அவர் இடம் கொடுத்துள்ளார். இந்த அணியில் விரேந்தர் சேவாக் மற்றும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக இருக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்திலும் பிரையன் லாரா நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Warne 1

கெவின் பீட்டர்சன் ஐந்தாவது இடத்தில் ஆட குமார் சங்ககாரா விக்கெட் கீப்பராக இருக்கிறார். (இந்த பட்டியலில் தோனிக்கு இடமில்லை. அவருக்கு பதிலாக குமார் சங்ககாரா விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.) ஆல்-ரவுண்டராக அன்ரூவ் பிளின்டாப், பந்துவீச்சாளராக வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி இருக்கின்றனர்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பலகாலம் ஆடியுள்ள ஷேன் வார்னே 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம் இவர்தான்.

Sangakkara

வார்ன் தேர்வு செய்த சிறந்த உலக லெவன் அணி: விரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, சச்சின், பிரைன் லாரா, கெவின் பீட்டர்சன், குமார் சங்ககரா, ஆண்ட்ரு பிளின்டாப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, சோயிப் அக்தர், கர்ட்னி ஆம்புரூஸ்.

Advertisement