நான் விளையாடிய காலத்தில் என்னை திணறடித்த 2 தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஷேன் வார்ன் பகிர்வு

Warne

சர்வதேச கிரிக்கெட்டில் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் பல ஆண்டுகள் பல அட்டகாசமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக விக்கெட் வேட்டை நிகழ்த்தியவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே. சுழற்பந்துவீச்சில் இவர் ஒரு லெஜன்ட் என்றால் நிச்சயம் அது மறுக்கமுடியாத உண்மை. அந்த அளவிற்கு தான் விளையாடிய காலத்தில் பல்வேறு சாதனைகளையும், பெரிய பெரிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியவர்.

Warne

வளரும் இளம் தலைமுறையினரின் பெரும் முன்னோடியாக விளங்கும் ஷேன் வார்னே தற்போது பல்வேறு அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு தான் கற்றுக்கொண்ட பௌலிங் திறனையும் கற்றுக்கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய தலைமுறையில் யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பது குறித்து ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் பதிவிட்ட அந்த புகைப்படத்தில் சச்சின் மற்றும் லாரா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதனை பகிர்ந்த அவர் : இந்த இருவரும் என் காலத்தில் விளையாடிய இரண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் நாங்கள் மூவரும் விளையாடிய காலகட்டம், நடந்த போட்டிகள் நினைவிருக்கிறதா ? மீண்டும் பார்க்க விரும்புகிறீர்களா ? என பதிவிட்டுள்ளார்.

மேலும் அது மட்டுமின்றி இந்த பதிவுக்கு லாரா பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள கமெண்டில் : உங்களுடன் விளையாடிய அனைத்து போட்டிகளும் எனக்கு விருப்பமான போட்டிதான். நீங்கள் வீசும் ஒவ்வொரு பந்தையும் நான் மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டு விளையாடி இருக்கிறேன். நம் பக்கத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் உடன் நீங்கள் விளையாடிய போட்டிகளை தேடிக்கொண்டிருக்கிறேன். சிறந்த போட்டியை தேடிய பின்பு அதனை பதிவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷேன் வார்னே உலக கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த ஒரு சுழற்பந்து வீச்சாளராக பார்க்கப்படுபவர். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.