சச்சின் லாரா இருவரில் இவர்தான் எப்போதும் பெஸ்ட் பேட்ஸ்மேன். என்னோட சாய்ஸ் இவர்தான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்

warne
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா வைரசால் உலகமே முடங்கிப் போயுள்ளது.

Warne 1

- Advertisement -

இதன் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து வீரர்களும் தற்போது வீட்டில் முடங்கி உள்ளனர். இந்தியாவில் 14 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது போல் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து அவர்களை மகிழ்வித்தும் வருகின்றனர். அந்தவகையில் ஷேன் வார்ன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ போட்டுக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அவரிடம் சச்சின் டெண்டுல்கர் அல்லது பிரையன் லாரா ஆகிய இருவரில் எல்லா சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடக்கூடியவர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

ஏனெனில் இந்த இருவருக்குமே சம காலத்தில் பந்துவீசி பல சிக்சர்களை வழங்கியவர் ஷேன் வார்ன்.
இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது : எந்த சூழ்நிலையும் சிறந்த பேட்ஸ்மேன் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான் அவர் தான் எப்போதும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்.

- Advertisement -

ஆனால் டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அது பிரையன் லாராவாகத்தான். இருக்கும் ஏனெனில் இந்த இருவரும் இரவு பகல் போன்றவர்கள். இந்த இருவரை பார்த்து தான் மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் வருவார்கள் என்று ஷேன் வார்ன் தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகிய இருவரும் அவர்களின் காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள்.

sachin6

சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகாலம் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் ,முதல் இரட்டை சதம் ஆகிய பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement