ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது வரை பதினோரு லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கனகச்சிதமாக முதல் நான்கு இடத்திற்குள் தங்களை தக்கவைத்துக் கொண்டே இருக்கும்
ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தைத தான் பிடித்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 5வது இடத்தில் இருக்கிறது.
இப்படித்தான் இந்த வருட ஐபிஎல் தொடர் வித்தியாசமாக சென்றுகொண்டிருக்கிறது. டெல்லி,பஞ்சாப்,ராஜஸ்தான் போன்ற மிகவும் ஆக்ரோசமாகவும் வலிமை வாய்ந்த அணிகளாகவும் காணப்படுகின்றன.
இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் சாம்பியன் அணியை கைப்பற்ற போவது யார் என்று அனைத்து விமர்சகர்களும் பேசி வருகின்றனர். குறிப்பாக டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வலிமை வாய்ந்த அணிகளாக இருப்பதாக தெரிகிறது. டெல்லி அணி கடந்த இரண்டு வருடமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் அணி இந்த முறை புதிய கேப்டன் கே.எல் ராகுலுடன் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் எந்தஎந்த அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை தெரிவித்திருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே இதுகுறித்து அவர் கூறுகையில் ….
இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வது மிகவும் கடினம். ஆனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .ராஜஸ்தான் அணி கண்டிப்பாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும்.
மற்றொரு புறம் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் போல் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடி வந்துவிடும் . நான்காவது அணியாக டெல்லி அணி இருக்க மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த அணி கடந்த இரண்டு வருடமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து இருக்கிறார் ஷேன் வார்னே.