எனது பந்துவீச்சை சிதறடித்த 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்

Warne

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தனது அசாத்தியமான சுழற்பந்து வீச்சின் காரணமாக பல நூறு விக்கெட்டுகளை வீழ்த்தியவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்தியவர் இவர்தான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
ஷேன் வார்னே 708 இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

Warne

தனது லெக் ஸ்பின் பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை தனது காலத்தில் திக்குமுக்காட வைத்தவர். 1992 ஆம் ஆண்டு முதல் விளையாடிய இவர் 2007 ஆம் ஆண்டு வரை அனைத்து பேட்ஸ்மேன்களையும் தனது சுழற்பந்து வீச்சு மாயாஜாலத்தால் மிரள வைத்தவர். இந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவரது பந்து வீச்சை இரண்டு பேட்ஸ்மென்கள் எளிதாக விளையாடியதாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்… எனது சமகால வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் எனது காலத்தில் மட்டுமல்ல அனைத்து காலத்திலும் அந்த இருவரும் மிகச் சிறந்தவர்கள் என்று கூறலாம். எனது பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து பழக்கப்பட்டவர்கள் இவர்கள்தான்.

Lara 1

ஆனாலும் எனக்கு அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது தான் மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் அவர்கள் எனது பந்துவீச்சை அடித்து நொறுக்கினாலும் சில நேரங்களில் நான் அவர்களது விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறேன். பந்துவீச்சாளர்களை சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடுவதைப் பார்க்க அழகாக இருக்கும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் எனது பந்துவீச்சை ஆடுவதைப் பார்க்க நன்றாக இருந்தது என்று தெரிவித்திருக்கிறார் ஷேன் வார்னே.