
தோனி, விராட் கோலி இல்லாத இந்திய அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் ஷேன் வார்னே. தனக்கு பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் அவர். அந்த அணியில் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய நட்சத்திர இந்திய வீரர்கள் இடம் பெறவில்லை.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களிடையே சமூகவலைதளத்தில் நேரடியாக உரையாடி வருகின்றனர். இதே போன்று தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது தனக்கு பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்யச் சொல்லி ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அப்படி தேர்வு செய்த அந்த அணியில் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லை. மேலும் அவருடைய காலகட்டத்தில் ஆடிய வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார் .இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வார்னே :
இந்திய இந்திய அணியை சேர்ந்த இந்த வீரர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். நான் விளையாடிய வீரர்களை மட்டுமே இந்த அணியில் சேர்த்துள்ளேன். தோனி எப்போதுமே சிறந்த விக்கெட் கீப்பர். கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன். இந்த அணியில் லட்சுமனன் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், கங்குலி கேப்டனாக இருப்பதால் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. எனது காலத்தில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சை ஆடும் பேட்ஸ்மேனாக நவ்ஜோத் சிங் சித்து இருந்தார். இதனால்தான் அவரை துவக்க வீரராக தேர்வு செய்துள்ளேன் என்று தெரிவித்தார் ஷேன் வார்னே .அவர் தேர்வு செய்த அணி கீழே :
வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் டிராவிட், கங்குலி(கேப்டன்), சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே