3 வருடத்தில் 6 முறை தவறு செய்த வார்னே. இனிமே 1 வருடத்துக்கு இதை செய்யாதீங்க – கோர்ட் உத்தரவு

Warne
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்தாலும் லண்டனில் சொகுசு வீடு வாங்கி அங்கேயே வசித்து வருகிறார்.

Warne

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் கார் ஓட்டும்போது குறிப்பிட்ட அளவைவிட மிக வேகத்தில் ஓட்டியதாக போலீசிடம் சிக்கினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 6 முறை இதே போன்று குறிப்பிட்ட அளவை விட வேகமாக ஓட்டி போலீசிடம் சிக்கியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது ஒரு வருடத்திற்கு ஷேன் வார்ன் எந்தவித வாகனமும் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement