பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இதை செய்தே ஆக வேண்டும் – மும்பை வீரர்களை எச்சரித்த கோச்

kxip
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சிறப்பான தொடராக அமையவில்லை. ஏனெனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் கேகேஆர் அணியை வீழ்த்திய அவர்கள் மூன்றாவது போட்டியில் மீண்டும் பெங்களூர் அணியிடம் தோற்றது.

kxip

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சூப்பர் ஓவரை சென்று ஒரு போட்டியை தோற்றது. அடுத்த போட்டியிலும் எதிர்பாரா தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வரும் பஞ்சாப் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்றே தெரிகிறது. ஏனெனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடி வருகின்றனர். ஆனால் மும்பை அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்கள் பிரகாசிக்கவில்லை.

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசியுள்ள மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறுகையில் : பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டுமானால் ராகுல் மற்றும் அகர்வாலின் விரைவாக வீழ்த்தினால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியை வீழ்த்த முடியும் இல்லையெனில் அவர்கள் இருவரும் ரன்களை குவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த போட்டிகளில் ராகுல் மற்றும் அகர்வால் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ராகுல் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் எங்களது பந்து வீச்சாளர் உடன் ஆலோசனை நடத்தி அவர்களை விழுத்த திட்டமிடுவோம். மேலும் மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் ஆடக்கூடிய ராகுலை வீழ்த்துவது சற்று சிரமம்தான். இருப்பினும் அவர்கள் இருவரையும் வீழ்த்தினால் மட்டுமே எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement