இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கப்போவது இவங்க தான் – முன்னாள் நியூசி வீரர் உறுதி

ipl

13 வருடமாக நடத்தப்பட்டுவரும் ஐபிஎல் தொடர் இந்த வருடம் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட முடிவினை நெருங்கி விட்டது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் தங்களை மிகப்பெரிய ஆதிக்க சக்திகளாக நிறுவி இருக்கின்றன.

Ipl cup

இந்த வருடமும் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னை ஒரு மிகப்பெரிய அணி என்று நிரூபித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் தொடரிலிருந்து பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறிவிட்டது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

துபாயில் நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இது குறித்து பேசியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறுகையில்…

bond

கைரன் பொல்லார்ட் போன்ற வீரர்கள் எங்களது அணியில் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலம் ஹர்திக் பாண்டியா அவருக்கு அடுத்து வருவது எங்களது பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தி இருக்கிறது .மற்ற அணிகளை விட எங்கள் அணியின் பந்துவீச்சு அசுரபலம் பெற்றிருக்கிறது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் எங்களது அணியை குறை சொல்லவே முடியாத அளவில் இருக்கிறது.

- Advertisement -

MI

மற்ற அணிகளை விட அனைத்து வகையிலும் எங்கள் அணி பலம் வாய்ந்த அணியாக தான் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் ஆனால் இந்த வருடம் கோப்பையை வெல்ல முடியும் என்று அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார் ஷேன் பான்ட்.