அக்சர் படேலுக்கு பதிலாக டெல்லி அணியில் இணைந்து இளம் மும்பை ஆல்ரவுண்டர் – நிர்வாகம் அறிவிப்பு

Axar
- Advertisement -

காயம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் இருந்து விலக, ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அக்க்ஷர் பட்டேலுக்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் பாகிஸ்தான் தொடரில் விளையாடி விட்டு ஐபிஎல்லில் பங்கேற்பதற்காக வந்த டெல்லி அணியின் மற்றொரு வீரரான ஆன்ட்ரிச் நோர்க்கியாவிற்கும் கரோனோ தொற்று உறுதியானதால் அவரும் தனிமை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார். ரபாடா குரைண்டைன் முடிந்து நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடினார்.

axar 1

- Advertisement -

இப்போது டெல்லி அணி ஒரு முடிவு செய்துள்ளது. அதன்படி அக்‌ஷர் பட்டேல் திரும்பவும் அணியுடன் இணையும் வரை அவருக்குப் பதில் மும்பைக்காக உள்ளூர் போட்டியில் விளையாடி வரும் ஆல்ரவுண்டரான “சாம்ஸ் முலானியை” அணியில் எடுத்துள்ளது. இது ஒரு குறுகிய கால திட்டம்தான்.
ஐபிஎல்லின் வீரர்கள் ஒழுங்குமுறை விதி 6.1(c)ன்படி, ஒரு வீரரின் உடல்நிலை குணமாகும்வரை அவருக்கு பதில் மற்றொரு வீரரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் குணமான வீரர் திரும்ப வந்தவுடன் இந்த வீரர் அணியிலிருந்து விடுவிக்கப்படுவார், அத்துடன் விடுவிக்கப்பட்ட வீரர் நடப்புத் தொடரில் மற்ற எந்த அணியிலும் விளையாடக் கூடாது. இந்த விதிமுறையை பயன்படுத்திதான் ஏற்கனவே பெங்களூர் அணி கிறிஸ் கெயிலை அணிக்குள் கொண்டு வந்தது.

mulani 1

இப்போது டெல்லி அணியும் இந்த விதியைப் பயன்படுத்தி அக்க்ஷர் பட்டேலுக்கு பதில் சாம்ஸ் முலானியையும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே டெல்லி அணியானது காயமடைந்த ஸ்ரேயாஸ் அய்யர்க்கு பதில் கர்நாடகாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அனிருதா ஜோசியையும் அணிக்குள் கொண்டு வந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

mulani

சாம்ஸ் முலானியும், அக்‌ஷர் பட்டேலைப் போலவே இடது கை ஆர்தொடாக்ஸ் பந்துவீச்சாளர் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement