MS Dhoni : நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த தோனி கொடுத்த இந்த ஐடியாவே காரணம் – ஷமி

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Shami-2
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

Shami

போட்டி முடிந்து ஹாட்ரிக் விக்கெட் விக்கெட் குறித்து பேசிய ஷமி கூறியதாவது : நான் கடைசி ஓவரை வீசும்போது என்னால் சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். அதேபோன்று நான் இரண்டு விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தோனி என்னிடம் வந்து “நீ ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த இதுவே சரியான தருணம்” உன்னால் முடியும் அடுத்த பந்தினை யார்க்கராக வீசு நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று கூறினார். அவர் கூறியது போன்று யார்க்கர் வீசினேன் விக்கெட்டும் கிடைத்தது என்று தோனி குறித்து ஷமி பேட்டி அளித்தார்.

Advertisement