Virat Kohli : புவனேஷ்வர் குமார் பதிலாக இவரே அணியில் விளையாடுவார்- கோலி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 5 ஆவது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான

Bhuvi-1
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 5 ஆவது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பந்து வீசினார். அந்த ஓவரில் பந்துவீசும்போது கால் தவறி கீழே விழுந்த புவனேஷ்வர் குமார் காயமடைந்தார். அதனால் அப்போதே அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

Bhuvi

- Advertisement -

இந்நிலையில் புவனேஷ்வர் குமார் குறித்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : புவனேஸ்வர் குமார் காயமடைந்துள்ளார். அவரின் காயம் குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் அதனால் அவர் அடுத்து வரும் 2 அல்லது 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார். அவர் இந்திய அணியின் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருப்பார்.

மேலும், அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்திய அணியில் விளையாடுவார். ஷமி ஏற்கனவே சிறப்பான பார்மில் இருப்பதால் அவர் சிறப்பாக பந்துவீசுவார் என்றும் கோலி கூறினார்.

Shami

ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரரான தவான் காயம் அடைந்துள்ளார். அவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் காயம் இந்திய அணி நிர்வாகத்தையும், ரசிகர்களையும் வருத்தமடைய வைத்துள்ளது.

Advertisement