கபில் தேவ், பும்ராவிற்கு அடுத்து சாதித்து காட்டிய ஷமி – ஐ.சி.சி வெளியிட்ட அறிக்கை

- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

Shami

- Advertisement -

அதன்படி நேற்று வெளியிடப்பட்ட டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் கணிசமாக முன்னேற்றத்தை கண்டுள்ளனர். வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி தர வரிசையில் தற்போது எட்டு இடங்கள் முன்னேறி தன் வாழ்நாளில் சிறந்த இடமான 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் கபில்தேவ்(877), பும்ரா(832) ஆகியோருக்குப் பின் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஷமி தற்போது 790 புள்ளிகளுடன் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளார்.

shami

அதேபோல இரட்டை சதமடித்து அசத்திய அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் 691 புள்ளிகளை சேர்த்து டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களான கோலி, ரஹானே, புஜாரா மற்றும் புரோகித் ஆகியோர் முதல் 10 இடத்தில் உள்ளதால் நான்கு இந்திய வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement