- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மலைப்போன்ற வீரரை வீழ்த்தி மகத்தான சாதனையை நிகழ்த்திய ஷமி – விவரம் இதோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களில் ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்கள் குவித்தது. ரஹானே அதிகபட்சமாக 74 ரன்களை குவித்தார்.

- Advertisement -

அதன்பின்னர் 468 குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஷமி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கார்ன்வால் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது யாதெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சமி 151 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by