கோலியோடு சேர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர இந்திய வீரர் – விவரம் இதோ

Shami-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியதை தொடர்ந்து படு தோல்வி அடைந்து பின்தங்கி உள்ளது. இந்த போட்டிக்கான தோல்வியில் இந்திய பேட்ஸ்மேன்களின் பங்கு அதிகம் என்றே கூறலாம். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் போது பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, மேலும் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறியதால் இந்திய அணி 36 ரன்களில் இரண்டாவது இன்னிங்சில் சுருண்டது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Ind

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி களமிறங்கி விளையாடினார். அப்போது 4 பந்துகளை சந்தித்து அவர் ஒரு ரன் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய அதிவேக பந்தில் கையில் காயமடைந்தார்.

கையில் பட்டதும் மிகுந்த வலியால் அவதிப்பட்ட ஷமி சிறிது நேரம் கழித்து ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விட்டு வெளியேறினார். பின்னர் உடனடியாக அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் காயத்தின் தன்மை குறித்தும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து தெரிய வந்தது. போட்டி முடிந்து பேசிய இந்தியாவின் கேப்டன் கோலியும் மருத்துவ அறிக்கை வந்த பிறகே அவரது நிலை குறித்து தெரியும் என திட்டவட்டமாக கூறி இருந்தார்.

Shami 2

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் போது சுத்தமாக பந்துவீச ஷமி வரவில்லை மேலும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கி விளையாடினார். இந்நிலையில் தற்போது ஷமி குறித்த அறிக்கை அதிகாரபூர்வமற்ற அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் வலது கையில் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு இருப்பதாகவும் இதனால் அவரால் அடுத்த சில வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் பந்து வீச முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

shami

இதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் போட்டியுடன் கோலி நாடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் இத் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பி காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement