IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் வீரரை கிண்டல் செய்து ரசிகர்களின் வெறுப்பை பெற்ற கோலி மற்றும் ஷமி

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின

Shami
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

ind vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களை குவித்தார்.

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷமி சிறப்பாக பந்து வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Shami 1

இந்த போட்டியில் இந்திய அணி கடைசியாக வெற்றி பெறும்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான காட்ரெல் விக்கெட் வீழ்த்தியது. வழக்கமாக காட்ரெல் விக்கெட்டை வீழ்த்தினால் ராணுவ வீரரும் போன்று நடந்து சல்யூட் செய்து தனது விக்கெட்டை கொண்டாடுவார். அதனை போன்று அவர் அவுட் ஆகும்போது நேற்று இந்திய வீரரான ஷமி மற்றும் கோலி ஆகியோர் சல்யூட் அடித்து அவரை கலாய்க்கும் விதமாக நடந்து கொண்டனர்.

cotrell

இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய வீரர்கள் இதுபோன்ற நடந்து கொள்வார்கள் என்பது போன்ற ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவது வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இது சம்பத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement