இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அதில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிடம் அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.
மேலும் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொதப்பிய அந்த அணியின் பஸ்பால் அணுகு முறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனவே இந்த தொடரில் வெற்றி பெற்று தங்களுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. மறுபுறம் இந்த வருட துவக்கத்தில் ஆஸ்திரேலியாவை புகழ்பெற்ற காபா மைதானத்தில் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்தது.
பார்ட்டியை கலைப்போம்:
குறிப்பாக அறிமுக வீரர் சமர் ஜோசப் காபா மைதானத்தில் நெருப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். எனவே 1 – 1 (2) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை சமன் செய்த புத்துணர்ச்சியுடன் இத்தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் தயாராகியுள்ளது.
இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியுடன் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ள அவர் 41 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து தயாராகியுள்ளது. ஆனால் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை தோற்கடித்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஃபேர்வேல் பார்ட்டியை கலைப்போம் என சமர் ஜோசப் ஜோசப் அதிரடியாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு “ஆண்டர்சன் அற்புதமான வீரர். நான் அவரைப் பார்த்து வளர்ந்தவன். இந்த லெவலில் மிகவும் தரமான அவர் வெற்றியுடன் விடை பெறுவது கச்சிதமாக இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம்”
இதையும் படிங்க: 15 வருஷம் கழித்தும் மனுஷன் மாறவே இல்ல.. ஒரே அட்வைஸ் தான் கொடுத்தாரு.. தோனி பற்றி அஸ்வின் வியப்பு
“இருப்பினும் அவருடைய வழியனுப்பலை நான் பாழாக்க விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவில் விளையாடிய எங்களுடைய கடைசி பயணத்தில் இருந்த அதே எனர்ஜியை இங்கேயும் மெய்ன்டன் செய்ய விரும்புகிறோம். இத்தொடரில் இங்கிலாந்துக்கு சவால் கொடுக்கும் எண்ணத்துடன் நாங்கள் இங்கே வந்துள்ளோம். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இடமாகும். குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டார்க், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அசத்தியதைப் போல நானும் செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார்.



