வெறும் 5 டெஸ்ட் போட்டிகளிலேயே இப்படி ஒரு சாதனையா? அசரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் – விவரம் இதோ

Shamar-Joseph
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்த அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரு அணியும் வெற்றிக்காக போராடிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15-ஆம் தேதி கயானா நகரில் துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 144 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக 16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்து 239 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக முதல் இன்னிங்சில் பந்து வீசிய 24 வயதான ஷமர் ஜோசப் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுத்தலான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 14 ஓவர்கள் வீசி நான்கு மெய்டன் ஓவர்களுடன் 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : ஒரு வாரத்திற்கு அந்த மியூசிக் டைரக்டர் வாழ்க்கையை நான் வாழனும் – தினேஷ் கார்த்திக் அளித்த சுவாரசிய கருத்து

இதன் மூலம் தான் பங்கேற்ற முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலேயே மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஐந்து போட்டியிலேயே இப்படி மூன்று ஐந்து விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement