85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 2 ஆவது வெஸ்ட் இண்டீஸ் வீரராக ஷமர் ஜோசப் படைத்த சாதனை – விவரம் இதோ

Shamar-Joseph
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 17-ஆம் தேதி அடிலெயிடு மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 188 ரன்கள் ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக மெக்கன்சி 50 ரன்களையும், ஷமர் ஜோசப் 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெடுகளை இழந்து 59 ரன்கள் குவித்துள்ளது. மேலும் 129 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அறிமுகமான 24 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் 85 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றினை வெஸ்ட் இண்டீஸ் வீரராக சமன் செய்துள்ளார். அந்த வகையில் கடந்த 1939-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜான்சன் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்களை செய்த ரோஹித் சர்மா – பிளேயிங் லெவன் இதோ

அதனை தொடர்ந்து தற்போது 85 ஆண்டுகள் கழித்து இந்த போட்டியில் அறிமுகமான ஷமர் ஜோசப் தான் வீசிய முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்து அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 23-வது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement