WI vs BAN : வழக்கமாக 5 ஆவது இடத்தில் இறங்கும் நான் இதற்காகவே 3 ஆம் இடத்தில் இறங்கினேன் – ஷாகிப்

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின

Shakib-2
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

WI vs BAN

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர்.

அதன் பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Shakib

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சாகிப் அல் ஹசன் கூறியதாவது : இந்த போட்டியில் நான் விளையாடியதை மிகச் சிறப்பாக உணர்கிறேன். மேலும் பேட்டிங் செய்யும்போது இறுதிவரை நான் நிற்க வேண்டும் என்று நினைத்தேன் அது முழுமை அடைந்தது எனக்கு திருப்தி. நான் கடந்த ஒன்றரை மாதங்களாக பேட்டிங்கில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

Shakib 1

நான் வழக்கமாக 5 ஆவது வீரராக களம் இறங்குவேன் அப்போது 30 அவர்களுக்கு மேல் எனக்கு பேட்டிங் கிடைக்கும். அதனால் நான் தற்போது மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறேன் அதனால் எனக்கு தேவையான அளவு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் என்னால் ரன்களையும் எளிதாக குறைக்க முடிகிறது. பந்துவீச்சிலும் நான் எனது பங்களிப்பை கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எங்களது ரசிகர்கள் எங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் மேலும் இந்த தொடர் மிகச் சிறப்பாக அமையும் என்று சாகிப் கூறினார்.

Advertisement