Worldcup : இந்தியா இந்தியானு சும்மா வாயால சொன்னா மட்டும் போதாது செய்தும் காட்டனும் – சாகிப் அதிரடி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Shakib
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று பல பிரபலங்கள் கூறிவரும் நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் இந்திய அணிக்கு எதிராக ஒரு பேட்டியினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் உலக கோப்பையை வெல்வது என்பது எளிதான காரியமல்ல.

ind

இந்திய அணி வாயால் சொன்னால் மட்டும் பத்தாது உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி நிச்சயம் கடுமையாக உழைக்க வேண்டும். அனைத்து அணிகளும் தற்போது பலமாகவே உள்ளதால் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் இந்திய அணி சிறப்பாக ஆடினால் மட்டுமே இவ்வளவு கோப்பை வெற்றி பெற முடியும். எனவே பேசுவதைத் தவிர்த்து விளையாட்டில் பலத்தைக் நிரூபியுங்கள் என்பதுபோல கூறியுள்ளார் சாகிப் அல் ஹசன்.

Advertisement