BAN vs AFG : இந்திய அணியை வீழ்த்தியே தீருவேன் – வங்கதேச வீரர் சபதம்

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமை

bangladesh
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ban vs afg

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக முஸ்டபிகுர் ரஹீம் 83 ரன்களையும், ஷாகிப் 51 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக சாகிப் சிறப்பாக பந்து வீசி 29 விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவரை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

shakib

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சாகிப் கூறியதாவது : இந்த தொடரில் வங்கதேச அணிக்காக ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது. மேலும் வங்கதேச அணியின் வெற்றியில் எனது பங்களிப்பு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இனிவரும் ஆட்டங்களிலும் எனது பங்களிப்பு நிச்சயம் அளிப்பேன். இனிவரும் இரண்டு ஆட்டங்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு போட்டிகள் மிக முக்கியமான போட்டிகளாகும். இந்திய அணியை நாங்கள் இதற்கு முன்னர் உலககோப்பை போட்டியில் வீழ்த்தியது போல சிறப்பாக விளையாடி இந்த தொடரிலும் வீழ்த்துவோம் என்று சாகிப் கூறினார்.

Advertisement