டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி (என்னென்ன சொல்றாரு பாருங்க)

Shakib-3
- Advertisement -

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளின் அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கதேச அணியும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், நிபுணர்கள் என இந்தத் தொடரில் கோப்பையை கைப்பற்ற போவது யார் ? என்ற கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

Ban

- Advertisement -

அந்த வகையில் தற்போது வங்கதேச அணியின் முன்னணி வீரரான ஷாகிப் அல் ஹசன் இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணி எது ? என்பது குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வங்கதேச அணிக்கு இந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இதற்காக நாங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம்.

கடைசியாக நடைபெற்ற மூன்று தொடர்களிலும் நாங்கள் பெரிய வெற்றி பெற்று உள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நாங்கள் தொடர்ச்சியாக பெரும் வெற்றிகளால் தற்போது எங்களுடைய மனநிலை நல்ல பாசிட்டிவ்வாக இருக்கிறது. இதன் காரணமாக நிச்சயம் எங்களால் உலகக் கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அது தவிர முக்கியமான போட்டிகளில் எங்களால் குறைந்த ரன்களில் கூட வெற்றி பெற முடிகிறது.

bangladesh1

எனவே நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரில் நன்றாக விளையாடி வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரை 2 க்கு 1 என்ற கணக்கிலும், அதற்கடுத்து ஆஸ்திரேலியா தொடரை 4-1 என்ற கணக்கிலும், அதற்கடுத்து நியூசிலாந்து தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது வங்கதேச அணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

ban 1

ஆனால் அவரின் இந்த கருத்து எந்த அளவிற்கு பலிக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் கோப்பையை கைப்பற்ற பலத்த போட்டி உள்ள அணிகளாக வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement