- Advertisement -
ஐ.பி.எல்

தான் விளையாடிய வீரர்களை கொண்டு சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை வெளியிட்ட ஷாகிப் அல் ஹசன் – வீரர்களின் பட்டியல் இதோ

வங்கதேச அணியின் சீனியர் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன் அந்த அணியின் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். வங்கதேச கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் டி20 போட்டிகளிலும் பல அணிகளுக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் தற்போது சூதாட்டக்காரர்கள் அணுகியது குறித்த தகவலை தெரிவிக்காததால் தற்காலிக தடையில் இருக்கிறார்.

இந்நிலையில் தான் இதுவரை இணைந்து விளையாடிய வீரர்களைக் கொண்டு சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ள அவர் இது குறித்த அணியை க்ரிக்பஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தேர்வு செய்து வெளியிட்ட அணி சிறப்பானதாக இருந்தாலும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், 2018-19 ஆகிய ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்நிலையில்தான் தான் இணைந்து ஆடிய சிறந்த வீரர்களை கொண்டு உருவாக்கிய ஐபிஎல் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் டேவிட் வார்னர் ஆகியவை தேர்வு செய்துள்ளார்.

மேலும் மூன்றாவது வீரராக கம்பீரை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த அணிக்கு அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளார். கம்பீரின் கேப்டன்சி யில் ஷகிப் அல் ஹசன் 2012 மற்றும் 14 ஆகிய இரண்டு சீசன்களில் கேகேஆர் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே மற்றும் யூசுப் பதான் ஆகியோருடன் தன்னையும் (ஷகிப் அல் ஹசன்) ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளராக சன்ரைசர்ஸ் அணியில் அவருடன் ஆடிய புவனேஸ்வர் குமார் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பாலாஜி, உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்த சிறந்த ஐபிஎல் லெவன் அணி இதோ : 1) ராபின் உத்தப்பா, 2) டேவிட் வார்னர், 3) கௌதம் கம்பீர் (கேப்டன்), 4) மனிஷ் பாண்டே, 5) யூசுப் பதான், 6) ஷகிப் அல் ஹசன், 7) ஆந்த்ரே ரசல், 8) சுனில் நரேன், 9) புவனேஸ்வர் குமார், 10) லட்சுமிபதி பாலாஜி, 11) உமேஷ் யாதவ்

- Advertisement -
Published by