ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் அணியை தேர்வு செய்த ஷாகிப் அல் ஹசன் – கேப்டன் யார் தெரியுமா ?

Shakib-3
- Advertisement -

வங்கதேச அணியை சேர்ந்த 34 வயது முன்னணி வீரரான ஷாகிப் அல் ஹசன் 2006 ஆம் ஆண்டு வங்கதேச கிரிக்கெட் அறிமுகமாகி தற்போது வரை அந்த அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார். இதுவரை வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 58 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

Shakib-2

- Advertisement -

அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் துவக்க வீரர்களாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரை துவக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். அதேபோன்று மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லையும், நான்காவது இடத்தில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அவர் தேர்வு செய்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகளவு துவக்க வீரராக விளையாடியுள்ள கெயிலை அவர் மூன்றாவது வீரராக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 5 ஆவது வீரராக உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்று பார்க்கப்படும் ஜேக் காலிஸ்ஸை தேர்வு செய்துள்ளார். ஆறாவது வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை தேர்வு செய்த அவர் இந்த ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாக அவரை தேர்வு செய்துள்ளார்.

dhoni

7-வது இடத்தில் தன்னை தானே ஆல்-ரவுண்டராக அவர் தேர்வு செய்து கொண்டார். மீதமுள்ள நான்கு பவுலர்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளராக ஷேன் வார்ன் மற்றும் முரளிதரன் ஆகியோரை தேர்வு செய்த அவர் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக வாசிம் அக்ரம் மற்றும் மெக்ராத் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஷாகிப் அல் ஹசன் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணி இதோ :

1) சச்சின் டெண்டுல்கர், 2) சயீத் அன்வர், 3) கிரிஸ் கெயில், 4) விராட் கோலி, 5) ஜேக் காலிஸ், 6) எம்.எஸ்.தோனி (கேப்டன்), 7) ஷாகிப் அல் ஹசன், 8) முரளிதரன், 9) ஷேன் வார்ன், 10) கிளென் மெக்ராத், 11) வாசிம் அக்ரம்

Advertisement