இவர் ரொம்ப அடம் பிடிக்கிறார். இந்திய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பது சந்தேகம் தான் – விவரம் இதோ

bangladesh
- Advertisement -

வங்கதேச அணி வரும் நவம்பர் 3-ம் தேதி இந்திய அணியுடனான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இந்தியா வர உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக வங்கதேச அணி வீரர்கள் ஊதிய உயர்வு உட்பட 11 அம்ச கோரிக்கைகளை அவர்களது கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Ban

- Advertisement -

வீரர்கள் நடத்திய இந்த போராட்டத்தை முடித்து வைக்கும் விதமாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில் அவர்களின் இரண்டு கோரிக்கைகளை தவிர மற்ற ஒன்பது கோரிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் மீண்டும் திட்டமிட்டபடி வங்கதேச அணி இந்தியா தொடரில் விளையாடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டிரைக் வாபஸ் பெற்றாலும் வீரர்கள் சிலர் இந்தத் தொடருக்கு வருவார்களா ? என்று உறுதியான தகவல் இல்லை. ஏனெனில் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியின் பயிற்சி போட்டிக்கு திரும்பவில்லை. மேலும் கடைசி நேரத்தில் அவர் இந்தியா செல்ல மாட்டேன் என்று கூறினால் நாங்கள் என்ன செய்வது என்று அந்த அணியின் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியுள்ளார்.

bangladesh1

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது : நிச்சயம் முக்கிய வீரர்கள் இந்திய தொடருக்கு பயணிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எங்களால் எந்த ஒரு முடிவையும் அதிரடியாக எடுக்க முடியாது. என்னால் திடீர் முடிவை எடுக்க முடியுமா என்பதும் எனக்குத் தெரியவில்லை. சாகிப்பை இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

Shakib 1

மற்றபடி எனக்கு வேறு எந்த வழியும் தற்போது தெரியவில்லை. ஆனால் எனக்கு கிடைத்த தகவலின் படி அவர்கள் இந்தியா பயணிக்க மறுப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஒருவேளை அவர்கள் மறுத்து விட்டால் 30ஆம் தேதியன்று திடீரென என்னால் புது கேப்டனை தேர்வு செய்து அணியையும் அணியையும் மாற்ற முடியாது அதற்கு நான் என்ன செய்ய முடியும் நீங்களே கூறுங்கள் என்று பேட்டியில் புலம்பியுள்ளார்.

Advertisement