Shakib : கபில் தேவ், யுவராஜ் சிங்குடன் சாதனை பட்டியலில் இணைந்த – சாகிப் அல் ஹசன்

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமை

- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ban vs afg

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக முஸ்டபிகுர் ரஹீம் 83 ரன்களையும், ஷாகிப் 51 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக சாகிப் சிறப்பாக பந்து வீசி 29 விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவரை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

shakib

இந்நிலையில் நேற்று சாகிப் அல் ஹசன் ஒரு இன்னிங்சில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் உலக கோப்பை போட்டிகளில் எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கபில்தேவின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உலக கோப்பை போட்டியில் ஒரே இடத்தில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement