மோசமான நடத்தையால் மீண்டும் தடைசெய்யப்பட்ட ஷாகிப் அல் ஹசன் – மைதானத்தில் நடந்தது என்ன ?

Shakib
- Advertisement -

பங்களாதேஷ் அணியின் அனுபவ நட்சத்திர ஆல்ரவுண்டரான சாகிப் அல் ஹசன் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக அந்த அணியின் முக்கிய வீரராக விளையாடிவரும் ஷகிப் அல் ஹசன் சர்வதேச கிரிக்கெட்டில் 57 டெஸ்ட் போட்டிகள், 212 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நல்ல கிரிக்கெட்டர் என்ற பெயர் எடுத்தாலும் தனிப்பட்டமுறையில் இவரது செயல்பாடுகள் அவருக்கு மோசமான பெயரையே பெற்றுத் தந்துள்ளன என்றே கூறலாம்.

Shakib 1

- Advertisement -

ஏனெனில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதாக ஒப்புக்கொண்ட ஷாகிப் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவ்வப்போது தனது திமிரான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்திக்கு ஆளானார். தற்போது டாக்கா பிரீமியர் லீக் தொடரில் அம்பயருடன் ஏற்பட்டு சிறிய உரசல் காரணமாக ஸ்டெம்பை எட்டி உதைத்தது மட்டுமின்றி மீண்டும் ஒருமுறை ஸ்டம்பை பிடுங்கி மைதானத்தில் அடித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகின. அதன்படி தற்போது நடைபெற்று வரும் டாக்கா பிரிமியர் லீக்கில் ஒரு அணியின் கேப்டனாக விளையாடி வரும் ஷாகிப் அல் ஹசன் அம்பயரிடம் அவுட் கேட்டு அவர் கொடுக்காததால் ஆத்திரத்தில் ஸ்டம்பை காலால் எட்டி உதைத்தார். அதுமட்டுமின்றி போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்படும் வேளையில் ஸ்டம்பை பிடுங்கி தரையில் அடித்தார். அவரது இந்த மோசமான செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கண்டனத்தை பெற்றது. அதுமட்டுமின்றி தற்போது இந்த வீடியோக்கள் எல்லாம் வைரலாகி அவரை தடை செய்யவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக விசாரித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் இந்த மோசமான செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டு இருந்தாலும் அவரது இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் அதனால் DPL தொடரில் அடுத்து வரும் 4 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் அடுத்த நான்கு போட்டிகளில் அவர் தடை செய்யப்படுகிறார் என்றும் அறிவித்தது.

shakib 1

பங்களாதேஷ் அணி சார்பாக சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் மற்றும் கிட்டத்தட்ட 600 விக்கெட்டுகளை எடுக்க நெருங்கிவரும் ஒரு மிகச்சிறந்த வீரர் இவ்வாறு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது அவரின் மீது இருக்கும் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரின் இந்த தடைக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement