நான் தப்பு பண்ணிட்டேன். செய்றதெல்லாம் செஞ்சிட்டு இப்போ உருக்கமா பேசுறாராம் – என்னா நடிப்பு

- Advertisement -

பங்களாதேஷ் அணியின் கேப்டனும், முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக 56 டெஸ்ட் போட்டிகள், 206 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தற்போது ஐசிசியின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளின்படி ஓராண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தத் தடை குறித்து ஷகிப் அல் ஹசன் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : உண்மையாகவே நான் தடை செய்யப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. நான் விரும்பும் ஒரு விளையாட்டை பிரிகிறேன் என்பதை நினைக்கும் பொழுது என் மனது மிகவும் கஷ்டப்படுகிறது.

இருப்பினும் என் தவறை நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். சூதாட்ட தரகர்கள் என்னை அணுகியது நான் புகார் செய்து இருக்கவேண்டும். ஆனால் அதனை செய்யத் தவறி விட்டேன் இதனால் என் மீது எடுக்கப்பட்ட தண்டனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். சாகிப் தடைசெய்யப்பட்ட அறிவித்த பின்னர் அவருக்காக அவரது ரசிகர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அலுவலகத்தின் முன் நின்று போராட்டமும் நடத்தினர்.

Shakib 1

ஷாகிப் இல்லாமல் வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடும் எந்த போட்டியும் பார்க்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் அவரே தனது தடையை ஒத்துக் கொண்டதால் கண்டிப்பாக அவர் அந்த தடையை ஏற்றுக்கொண்டு திருந்த வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement